கிரெனடா இன்விடேஷனல்- 100 மீட்டர் ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லின் முதலிடம்

வெஸ்ட் இண்டீஸில் உள்ள கிரெனாடாவில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லின் முதலிடம் பிடித்தார். #Gatlin
கிரெனடா இன்விடேஷனல்- 100 மீட்டர் ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லின் முதலிடம்
Published on

வெஸ்ட் இண்டீஸில் உள்ள கிரெனடாவின் கிரானி ஜேம்ஸ் ஸ்டேடியத்தில் கிரெனடா இன்விடேஷனல் ட்ரக் பந்தயம் நடைபெற்றது. இதில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லின் கலந்து கொண்டார்.

இவர் பந்தய தூரத்தை 10.11 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். இந்த சீசனில் காட்லின் முதன்முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளார். 10.11 வினாடிகள் கடந்து ஐசையா யங் 2-வது இடத்தை பிடித்தார். மைக் ரோட்ஜர்ஸ் 10.17 வினாடிகளில் கடந்து 3-வது இடத்தை பிடித்தார்.

கடந்த முறை நடைபெற்ற கிரெனடா போட்டியில் காட்லின் காயம் காரணமாக கலந்து கொள்ளவில்லை. லண்டனில் கடந்த வருடம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் உசைன் போல்டை வீழ்த்தி முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com