கோல்டன் கிராண்ட் பிரிக்ஸ்: 100 மீட்டர் ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லின் வெற்ற

ஜப்பானில் நடைபெற்ற கோல்டன் கிராண்ட் பிரிக்ஸில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றார்.
கோல்டன் கிராண்ட் பிரிக்ஸ்: 100 மீட்டர் ஓட்டத்தில் ஜஸ்டின் காட்லின் வெற்ற
Published on

ஜப்பானில் கோல்டன் கிராண்ட் பிரிக்ஸ் தடகள பந்தயம் நடைபெற்றது. ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், பந்தய தூரத்தை 10.28 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். மற்றொரு அமெரிக்க வீரர் அசுகா கேம்பிரிட்ஜ் .03 வினாடி வித்தியாசத்தில் தோல்வியடைந்து 2-வது இடம்பிடித்தார். ஜப்பான் வீரர் ஷுகெய் டாதா 10.35 வினாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்தார்.

கனடாவின் ஆரோன் பிரவுன் 200 மீட்டர் ஓட்டத்தில் 20.62 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதல் இடம்பிடித்தார்.

பல்கேரிய வீராங்கனை ஐவெட் லாலோவா- கொலியோ 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் முதல் இடம்பிடித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com