ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்திய அணியின் லீக் ஆட்டங்கள் டெல்லிக்கு மாற்றம்

பிபா ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடரில், இந்திய அணியின் லீக் ஆட்டங்கள் டெல்லியில் நடைபெறும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்திய அணியின் லீக் ஆட்டங்கள் டெல்லிக்கு மாற்றம்
Published on

புதுடெல்லி:

ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் 6 நகரங்களில் அக்டோபர் 6-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெறும்.

இந்திய அணியின் லீக் ஆட்டங்கள் மும்பையில் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. உள்ளூர் போட்டி அமைப்பாளர்கள் மற்றும் அரசு சார்பில் இந்திய அணியின் லீக் ஆட்டங்களை டெல்லியில் நடத்த வேண்டும் என்று சர்வதேச கால்பந்து சங்கத்துக்கு (பிபா) வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனை பிபா ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து இந்திய அணியின் லீக் ஆட்டங்கள் டெல்லியில் நடைபெறும் என்று போட்டி அமைப்பாளர்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com