ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்தியா - கொலம்பியா இன்று மோதல்

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி தனது 2-வது லீக்கில் கொலம்பியாவுடன் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்தியா - கொலம்பியா இன்று மோதல்
Published on

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து திருவிழாவில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் போட்டியை நடத்தும் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது லீக்கில் இன்று (இரவு 8 மணி) கொலம்பியாவுடன் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. உலக கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்திருக்கும் இந்தியாவுக்கு முதல் ஆட்டத்தை போன்றே இதுவும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘கொலம்பியா கடுமையான போட்டி கொடுக்கக்கூடிய ஒரு அணி.

அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று இந்திய பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மாட்டோஸ் குறிப்பிட்டார். இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்க இன்றைய மோதலில் கட்டாயம் வெற்றி காண வேண்டும், குறைந்தது ‘டிரா’வாவது செய்ய வேண்டும். இதே போல் தனது தொடக்க ஆட்டத்தில் கானாவிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த கொலம்பியாவும் இதே நெருக்கடியில் தான் உள்ளது.

இன்றைய மற்ற ஆட்டங்களில் கானா-அமெரிக்கா (மாலை 5 மணி), துருக்கி-மாலி (மாலை 5 மணி), பராகுவே-நியூசிலாந்து (இரவு 8 மணி) ஆகிய அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com