

லிஸ்பான் :
17 வயதுக்கு உட்பட்ட இந்திய கால்பந்து அணி, உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஐரோப்பிய கண்டத்தில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள ஜூனியர் கிளப் அணிகளுடன் விளையாடி வருகிறது. லிஸ்பானில் நடந்த ஆட்டம் ஒன்றில் இந்திய ஜூனியர் அணி, போர்ச்சுகல் கிளப் அணியுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணியிடம் தோல்வி கண்டது.
போர்ச்சுகல் அணி தரப்பில் கார்லோஸ் சில்வா 40-வது நிமிடத்திலும், உஸ்சுமானே 51-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி தரப்பில் அனிகெட் ஜாதவ் 41-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.