கரீபியன் பிரிமீயர் லீக்கில் 15 பந்தில் அரைசதம் விளாசிய டுமினி

கரீபியன் பிரிமீயர் லீக்கில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் டுமினி 20 பந்தில் 65 ரன்கள் குவித்தார்.
டுமினி
டுமினி
Published on

கரீபியன் பிரிமீயர் லீக் டி20-யில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பார்படோஸ் டிரிடென்ட்ஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் சார்லஸ் - கார்ட்டர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சார்லஸ் 58 ரன்களும், கார்ட்டர் 51 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13.5 ஓவரில் 110 ரன்கள் குவித்தது.

அடுத்து வந்த டுமினி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 15 பந்தில் 2 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் கரீபியன் பிரிமீயர் லீக்கில் விரைவாக சதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 20 பந்தில் 4 பவுண்டரி, 7 சிக்சருடன் 65 ரன்கள் குவித்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் பார்படோஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 129 ரன்னில் சுருண்டது. வால்ஷ் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com