மும்பை தொழிலாளர்கள் போராட்டத்தில் தொடர்புடைய ஒருவர் கைது

மும்பை பாந்த்ராவில் தொழிலாளர்கள் போராட்டத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை தொழிலாளர்கள் போராட்டம்
மும்பை தொழிலாளர்கள் போராட்டம்
Published on

மும்பை:

கொரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.  

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருப்பதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இதற்கிடையே, மும்பை பாந்த்ராவில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மும்பை பாந்த்ராவில் தொழிலாளர்கள் போராட்டத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், டிவி சேனலில் பணிபுரியும் ராகுல் குல்கர்னி என்ற பத்திரிகையாளரை கைது செய்துள்ளோம். ரெயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளது என்ற தவறான தகவலை மக்களிடம் பரப்பியவர் என்பதன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம். நாளை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com