ஜான்டி ரோட்ஸ், பிரெட் லீயை பயிற்சியாளர்களாக்க இலங்கை அணி பரிசீலனை

இலங்கை கிரிக்கெட் அணி புகழ்பெற்ற ஜான்டி ரோட்ஸ், பிரெட் லீ ஆகியோரை பயிற்சியாளர்களாக்க பரிசீலனை செய்து வருகிறது.
ஜான்டி ரோட்ஸ், பிரெட் லீ
ஜான்டி ரோட்ஸ், பிரெட் லீ
Published on

கிரிக்கெட்டில் தலைசிறந்த பீல்டராக கருதப்படுபவர் தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ். அதேபோல் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என பாராட்டப்படுபவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பிரெட் லீ. இருவரையும் முறையே பீல்டிங் மற்றும் பவுலிங் கோச்சராக நியமிக்க இலங்கை கிரிக்கெட் போர்டு பரிசீலனை செய்து வருகிறது.

ஜான்டி ரோட்ஸ் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 52 டெஸ்ட், 245 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பிரெட் லீ ஆஸ்திரேலிய அணிக்காக 76 டெஸ்ட், 221 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் 700 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

உலகக்கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்ததால் பயிற்சியாளர்களை அதிரடியாக நீக்கியது இலங்கை கிரிக்கெட் போர்டு.

சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-0 எனக் கைப்பற்றியது இலங்கை அணி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com