காஷ்மீர்: பனிச்சரிவில் வாகனம் சிக்கி உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் வாகனத்தின் மீது இடிந்து விழுந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
காஷ்மீர்: பனிச்சரிவில் வாகனம் சிக்கி உயிரிழந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி
Published on

ஜம்மு: 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குப்வாரா-தங்டர் சாலை வழியாக நேற்று ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. கூனி நல்லா பகுதியை வாகனம் நெருங்கியபோது அப்பகுதியில் உறைந்திருந்த பனிப்பாறை சரிந்து கீழ்நோக்கி உருண்டது. பனிச்சரிவுக்கு இடையில் அந்த வாகனம் சிக்கி கொண்டது.

அதில் வந்த அனைவரும் பனி குவியலுக்குள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் பனிக்கட்டிகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர். நேற்று பின்னிரவில் ஒரு பிரேதம் மட்டும் மீட்கப்பட்டது. இன்றும் தொடர்ந்துவரும் மீட்பு நடவடிக்கையில் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இன்று பிற்பகல்வரை 5 பிரேதங்களும் கண்டெடுக்கப்பட்டன.

இன்று மாலை நிலவரப்படி இந்த கோர விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. #tamilnews #JKgovt #compensation

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com