உடற்தகுதியை நிரூபிக்க இரண்டாம்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சன்

இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் உடற்தகுதியை நிரூபிப்பதற்காக இரண்டாம் தர கிரிக்கெட்டில் விளையாடினார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்
ஜேம்ஸ் ஆண்டர்சன்
Published on

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம்பிடித்திருந்தார்.

ஆனால் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில், காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார். பின்னர் 2-வது மற்றும் 3-வது போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் அடுத்த மாதம் 4-ந்தேதி ஓல்டு டிராபோர்டில் தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாட தயாராகி வருகிறார். 4-வது போட்டியில் விளையாட வேண்டுமென்றால் உடற்தகுதியை நிரூபித்து காட்ட வேண்டும்.

இதனால் அவர் வழக்கமாக விளையாடும் லங்காஷைர் கிரிக்கெட் கவுன்ட்டியில் 2-ம்தர அணிக்காக களம் இறங்கி, முதல் ஸ்பெல்லில் ஆறு ஓவர்கள் வீசினார். இதனால் நான்காவது போட்டியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com