24-ம் ஆண்டுவிழா அன்புப் பரிசு: அனைத்து விமான கட்டணங்களிலும் 24% தள்ளுபடி - ஜெட் ஏர்வேஸ் அதிரடி

தனியார் விமானச் சேவையில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்நாட்டு-வெளிநாட்டு விமான கட்டணங்களில் 24 சதவீதம் தள்ளுபடி என்ற சிறப்பு சலுகையை இன்று அறிவித்துள்ளது.
24-ம் ஆண்டுவிழா அன்புப் பரிசு: அனைத்து விமான கட்டணங்களிலும் 24% தள்ளுபடி - ஜெட் ஏர்வேஸ் அதிரடி
Published on

நரேஷ் கோயல் என்பவரால் கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானச் சேவை நிறுவனம், கடந்த 5-5-1993 அன்றிலிருந்து உள்நாட்டு-வெளிநாட்டு விமான போக்குவரத்தை தொடங்கி, தொடர்ந்து வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறது.

போயிங் 777-300, ஏர்பஸ் A330-200/300, அடுத்த தலைமுறைக்கான போயிங் 737s மற்றும் ஏ.டி.ஆர். 72-500/600s உள்ளிட்ட 112 விமானங்களை இன்று சொந்தமாக கொண்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தினந்தோறும் சுமார் 600 உள்நாட்டு-வெளிநாட்டு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. உலகநாடுகள் மற்றும் உள்நாட்டில் உள்ள 65 முனையங்கள் இந்த சேவையின் வழியாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தங்களது நிறுவனம் தொடங்கப்பட்ட 24-வது ஆண்டு விழாவை இன்று கொண்டாடும் ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.


வரும் ஜூன் மாதம் 16-ம் தேதியில் இருந்து உள்நாட்டு-வெளிநாட்டு விமான பயணங்களுக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் பயணக் கட்டணங்களில் 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com