“கவர்ச்சி நடன மங்கை ஆக விரும்பினேன்” - ஜெனிபர் லோபஸ் ருசிகர பேட்டி

பாடகி ஆவதற்கு முன்பாக ஒரு கட்டத்தில் நான் கவர்ச்சி நடன மங்கை ஆகத்தான் எண்ணினேன் என ஜெனிபர் லோபஸ் தெரிவித்துள்ளார்.
பிரபல அமெரிக்க பாடகி ஜெனிபர் லோபஸ்
பிரபல அமெரிக்க பாடகி ஜெனிபர் லோபஸ்
Published on

வாஷிங்டன்:

பிரபல அமெரிக்க பாடகி ஜெனிபர் லோபஸ். இவர் நடிகை, நடன கலைஞர், ஆடை அலங்கார கலைஞர் என பல முகங்களை கொண்டவர். இவரது பாடல்கள் இன்றைக்கும் இளைய தலைமுறையினரை கவர்ந்திழுப்பவையாக உள்ளன.

அவர் டபிள்யு என்ற பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது:-

பாடகி ஆவதற்கு முன்பாக ஒரு கட்டத்தில் நான் கவர்ச்சி நடன மங்கை ஆகத்தான் எண்ணினேன். அந்த காலகட்டத்தில் என் தோழியர் பலரும் கவர்ச்சி நடன மங்கைகளாக விளங்கினர். நியூஜெர்சியில் கிளப்களில் நடனமாடி பல்லாயிரம் டாலர்கள் சம்பாதித்தனர்.

என்னிடம் அப்போது நிறைய பணம் இல்லை. சாப்பாட்டுக்குத்தான் பணம் தேவைப்பட்டது. அந்த நிலையில், என் தோழிகள் நான் மேலாடையின்றி ஆடத் தேவையில்லை என்று கூறினர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் ஜெனிபர் லோபஸ், ‘ஹஸ்ட்லர்ஸ்’ என்ற படத்தில் ‘வால் ஸ்டிரீட்’ வாடிக்கையாளர்களிடம் பணத்தை பறிக்கும் கவர்ச்சி நடன மங்கையாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com