தேர்தலை மனதில் வைத்தே ஜெயலலிதா வீடியோ வெளியீடு: சீமான்

ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் வைத்தே ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளதாக சீமான் கூறியுள்ளார்.
தேர்தலை மனதில் வைத்தே ஜெயலலிதா வீடியோ வெளியீடு: சீமான்
Published on

சென்னை:

ஜெயலலிதா வீடியோ வெளியிடப்பட்டது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தேர்தலை மனதில் வைத்தே ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர். இது நாகரீகமான அரசியல் அல்ல. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வார்டில் எந்த கேமராக்களும் இல்லை என்று முதலில் கூறினார்கள்.

பின்னர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ உள்ளது என்று தெரிவித்தனர். இதனை இப்போது வெளியிட வேண்டிய அவசியம் என்ன? முன்கூட்டியே வெளியிட்டு இருக்கலாமே? இருப்பினும் இந்த வீடியோ ஆர்.கே.நகரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com