ஊத்தங்கரை:
ஊத்தங்கரையில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு ஒன்றிய செயலாளர் தேவேந்திரன் தலைமை தாங்கினார்.
தொகுதி செயலாளர் திருஞானம், ஒன்றிய பொருளாளர் சேட்டு குமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணன், துணை தலைவர் சுப்பிரமணி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பண்டரிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.