இங்கிலாந்து டெஸ்ட் அணியில் முதன்முறையாக இடம் பிடித்தார் ஜேசன் ராய்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் முதன்முறையாக இடம் பிடித்துள்ளார் ஜேசன் ராய்.
ஜேசன் ராய்
ஜேசன் ராய்
Published on

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து வெற்றி பெற்று சாம்பியனானது.

ஜேசன் ராய் 8 போட்டிகளில் ஒரு சதம், நான்கு அரைசதங்களுடன் 443 ரன்கள் குவித்தார். இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் முதன்முறையாக அவருக்கு இடம் கிடைத்துள்ளது. அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் ஒரேயொரு போட்டியில் விளையாடுகிறது. இதற்கான இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் இடம் பிடித்துள்ளார்.

28 வயதாகும் ஜேசன் ராய் 2014-ம் ஆண்டு டி20 கிரிக்கெட்டிலும், 2015-ல் ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். தற்போது வரை 84 ஒருநாள் மற்றும் 32 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com