'காதலுக்காக எல்லாம்' - காதலனை கரம்பிடிக்க அரச குடும்ப அந்தஸ்தை இழக்க இருக்கும் ஜப்பான் இளவரசி

ஜப்பான் அரச குடும்பத்தின் இளவரசி மாகோ, தன்னுடன் படித்த குமுரோவை காதலித்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால், அவர் தன்னுடைய அரச குடும்ப அந்தஸ்தை இழக்க உள்ளார்.
'காதலுக்காக எல்லாம்' - காதலனை கரம்பிடிக்க அரச குடும்ப அந்தஸ்தை இழக்க இருக்கும் ஜப்பான் இளவரசி
Published on

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் பேத்தியும், 25 வயதான இளவரசியுமான மாகோ, டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழத்தில் படித்து பட்டம் பெற்றவர். 25 வயதான இளவரசி மாகோ கல்லூரியில் படிக்கும்போதே உடன் படிக்கும் கெய் குமுரோ என்பவரிடம் காதல் வயப்பட்டார்.

இந்நிலையில், கெய் குமுரொவை தான் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொண்டு வாழவிரும்புவதாகவும் தன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் இளவரசி மாகோ. அவரின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர்கள், திருமணத்திற்கு பிறகு மாகோ, தன்னுடைய இளவரசி பட்டத்தை துறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், ஜப்பான் அரசு குடும்ப விதிமுறைகளின் படி, அரச குடும்பத்தை சார்ந்தவர்கள், அரச குடும்பத்தை சார்ந்த ஒருவரைத்தான் திருமனம் செய்துகொள்ள வேண்டும். இதற்கு மாறாக திருமணம் செய்துகொண்டால் அவரின் பட்டம் பறிக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com