ஆந்திர சட்டசபை தேர்தல் - நடிகர் பவன்கல்யாண் 2 தொகுதிகளில் போட்டி

ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சட்டப்பேரவை தேர்தலில் காஜீவாக்கா, பீமாவரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். #PawanKalyan
ஆந்திர சட்டசபை தேர்தல் - நடிகர் பவன்கல்யாண் 2 தொகுதிகளில் போட்டி
Published on

பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா சட்ட சபைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 25 பாராளுமன்ற தொகுதி மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஆட்சியை பிடிப்பதில் தெலுங்குதேசம் கட்சிக்கும் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் ஜன சேனா கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் சட்டப்பேரவை தேர்தலில் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜீவாக்கா, மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

விஜயவாடாவில் உள்ள ஜனசேனா கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது இது அறிவிக்கப்பட்டது.

பவன் கல்யாண் எந்த தேதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கங்காதரம் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com