ஜம்மு: காணாமல் போன இரண்டு சிறுமிகள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காணாமல் போன இரண்டு சிறுமிகளை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம் அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு: காணாமல் போன இரண்டு சிறுமிகள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு மாவட்டத்தில் கடந்த 17-ம் தேதி சிம்பால் கேம்ப் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. சிறுமி காணாமல் போனதாக சிறுமியின் உறவினர்கள் போலீசிடம் புகார் அளித்தனர்.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சிறுமி டிக்யானா பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவளை மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த தேடுதலின்போது கடந்த ஏப்ரல் மாதம் பாகு கோட்டை பகுதியில் இருந்து காணாமல் போன 13 வயது சிறுமியையும் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com