ஜம்மு காஷ்மீரில் மாற்றத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்கிய ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ மருத்துவக் குழுவின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி செயற்கை உறுப்புகள் வழங்கப்பட்டன. #JammuKashmir #ArmyMedicalCorps
ஜம்மு காஷ்மீரில் மாற்றத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்கிய ராணுவம்
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் நலன் கருதி, ராணுவ மருத்துவக் குழு பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறது. அவ்வகையில் ரஜோரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து அதிகாலை முதலே ஏராளமான மாற்றுதிறனாளிகள்  தங்களுக்குரிய அனுமதி சீட்டினை ராணுவ அதிகாரிகளிடம் பெற்று முகாமில் பங்கேற்றனர்.

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உரிய சிகிச்சைகள் முறையாக வழங்கப்பட்டன. பரிசோதனைக்கு பின் கை, கால்கள் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டன. ராணுவத்தின் இந்த மருத்துவ உதவி அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ முகாமில் பல ராணுவ அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டனர். #JammuKashmir #ArmyMedicalCorps

X

Maalai Malar
www.maalaimalar.com