ஜெ.தீபா பேரவையை கலைக்க வைத்து ஏமாற்றிவிட்டனர்- தீபா குற்றச்சாட்டு

ஜெ.தீபா பேரவையை கலைக்க வைத்து நம்பிகை துரோகம் செய்துவிட்டதாக அதிமுகவினர் மீது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெ.தீபா
ஜெ.தீபா
Published on

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வுடன் இணைப்பு என்று நாங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்லி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இணைப்பு நடைபெறவில்லை. எங்கள் பேரவையில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். மற்றவர்களை இணைத்துக் கொள்ளவில்லை.

எனது கட்சியை நான் சிறப்பாக நடத்தி வந்தேன். அதை திசை திருப்பும் வகையில் எங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும், பின்னர் பின்வாங்குவதுமாக இருக்கின்றனர். நீண்டகாலமாக அ.தி.மு.க.வுடன் தொடர் போராட்டம் நடத்தி அவர்களுடன் இணைத்துக் கொள்கிறோம் என்று சொன்ன பிறகும் கூட எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

தேர்தல் வந்தால் மட்டுமே இணைத்துக்கொள்வதாக கூறுகின்றனர். தேர்தல் நேரத்தில் நாங்கள் தனித்து போட்டியிடக்கூடாது என்பதற்காக அவர்கள் இப்படி செய்வதாக கருதுகிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com