போயஸ் கார்டன் ஜெயா டி.வி. அலுவலகத்தில் மீண்டும் வருமான வரி சோதனை

போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டி.வி. அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
போயஸ் கார்டன் ஜெயா டி.வி. அலுவலகத்தில் மீண்டும் வருமான வரி சோதனை
Published on

சென்னை:

சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா இல்லத்தில் உள்ள கட்டிடத்தில் முன்பு ஜெயா டி.வி. அலுவலகம் செயல்பட்டது. அதன் பிறகு ஈக்காட்டுதாங்கலுக்கு மாற்றப்பட்டது.

சில வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். அப்போது ஜெயா டி.வி. அலுவலகத்திலும் போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டி.வி. அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா டி.வி. அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே நடந்த சோதனையின் தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com