புதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரேல்

புதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் உளவு செயற்கைக்கோள்
இஸ்ரேல் உளவு செயற்கைக்கோள்
Published on

‘ஒஃபேக் 16 என்ற புதிய உளவு செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஒஃபேக் 16 மேம்பட்ட திறன்களைக் கொண்ட மின்-ஒளியியல் உளவு செயற்கைக்கோள். இன்று அதிகாலை 4 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள், தகவல்களை பரிமாற தொடங்கியுள்ளது.

‘‘இஸ்ரேல் அரசின் பாதுகாப்பிற்கு தொழில்நுட்ப மேன்மையும் உளவுத்துறை திறன்களும் அவசியம்’’ என்று பாதுகாப்பு மந்திரி பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com