ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணியை 4-0 என அபாரமாக வீழ்த்தியது மும்பை சிட்டி எப்.சி.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் டெல்லி டைனமோஸ் அணியை 4-0 என வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி. அணி நான்காவது வெற்றியை பதிவு செய்தது. #ISL2017 #MumbaiCityFC #DelhiDynamos
ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணியை 4-0 என அபாரமாக வீழ்த்தியது மும்பை சிட்டி எப்.சி.
Published on

புதுடெல்லி:

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜேம்ஷெத்பூரில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கிய 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி, டெல்லி டைனமோஸ் எப்.சி. அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 12-வது நிமிடமே மும்பை அணியின் லூசியன் கோயன் கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 43-வது நிமிடம் மும்பையின் எவர்டன் சாண்டாஸ் கோல் அடித்தார். இதன்மூலம் முதல் பாதிநேர ஆட்டத்தில் மும்பை அணி 2-0 என முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் மும்பை அணியினரே ஆதிக்கம் செலுத்தினர். 49-வது நிமிடம் மும்பை சிட்டி எப்.சி. அணியின் தியாகோ சாண்டோஸ் கோல் அடித்தார். அதன்பின் 79-வது நிமிடம் மும்பையின் பல்வந்த் சிங் கோல் அடித்தார். டெல்லி அணியினர் எவ்வளவு முயற்சித்தும் இறுதிவரை எந்த கோலும் அடிக்கமுடியவில்லை. இதனால் மும்பை அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இதன்மூலம் மும்பை அணி புள்ளிபட்டியலில், 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

அடுத்ததாக நாளை நடைபெறும் லீக் போட்டியில் எப்.சி புனே சிட்டி - நார்த்ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

#ISL2017 #MumbaiCityFC #DelhiDynamos

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com