கவுண்டி போட்டியில் அசத்திய இசாந்த் சர்மா- 5 விக்கெட் வீழ்த்தினார்

ஐபிஎல் தொடரில் ஏலம் போகாத இசாந்த் சர்மா கவுண்டி கிரிக்கெட்டில் அசத்தியுள்ளார். வாவிக்சையர் அணிக்கெதிராக 5 விக்கெட் சாய்த்தார். #IPL2018 #KKR
கவுண்டி போட்டியில் அசத்திய இசாந்த் சர்மா- 5 விக்கெட் வீழ்த்தினார்
Published on

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இசாந்த் சர்மா. ஐபிஎல் தொடரில் இசாந்த் சர்மாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்தியா இங்கிலாந்து சென்று விளையாடுகிறது.

இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கவுண்டி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தார். அதன்படி சசக்ஸ் அணிக்காக விளையாட தீர்மானித்தார்.

சசெக்ஸ் அணி வாவிக்சையர் அணியை எதிர்கொண்டது. இதில் இசாந்த் சர்மா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். மழைக்காரணமாக இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. சசக்ஸ் அணி அடுத்த போட்டியில் லெய்செஸ்டர்சைர் அணியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com