

மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க.வுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன.
இதனால் கூட்டணி ஆட்சி உடனடியாக அமைந்து பா.ஜ.க. முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிவசேனா கட்சி தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருவதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் டிவிக்கு பேட்டி அளித்த மகாராஷ்டிரா மாநில நிதி மந்திரியும் பாஜக தலைவருமான சுதிர் முங்கந்திவார், ’மகாராஷ்டிராவில் வரும் 8-ம் தேதியுடன் பாஜக ஆட்சி முடிவடைகிறது. ஒரு புதிய அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அமைய வேண்டும். இல்லையெனில் ஜனாதிபதி தலையிட வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ’சாமனா’வில் இன்று வெளியான தலையங்க கட்டுரைக்கு ‘ஜனாதிபதி உங்கள் பாக்கெட்டிலா? - மகாராஷ்டிராவுக்கு அவமானம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
‘இது மொகலாய ஆட்சி காலத்து முறைபோல் உள்ளது. சட்டமும் அரசியலமைப்பும் யாருக்கும் அடிமை இல்லை. முன்கந்திவார் தெரிவித்த கருத்து அவரது எண்ணத்திலும் பாஜகவிலும் உருவாகியுள்ள நச்சுத்தன்மையை சுட்டிக் காட்டுகின்றது.