கிரிக்கெட் வீரர் ராகுல் நடிகையுடன் காதல்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ராகுலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டியும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேஎல் ராகுல், அதியா ஷெட்டி
கேஎல் ராகுல், அதியா ஷெட்டி
Published on

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அசாருதீன், விராட்கோலி ஆகியோர் சினிமா நடிகைகளை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த வரிசையில் கிரிக்கெட் வீரர் ராகுலும் இந்தி நடிகையை காதலித்து வருகிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் ராகுலும், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டியும் காதலிப்பதாக மும்பை சினிமாவில் பேச்சு கிளம்பியுள்ளது. இது குறித்து ராகுல் மற்றும் அதியாவுக்கு பொதுவான நண்பர் கூறியதாவது:-

‘ராகுலும், அதியாவும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள். அவர்கள் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து டேட்டிங் செல்கிறார்கள். இருவரும் காதலில் ரொம்ப சீரியசாக உள்ளனர்’.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நண்பர்கள் மூலம் ராகுலும், அதியாவும் சந்தித்துள்ளார்கள். நட்பாக தொடங்கியது பின்னர் காதலாகி இருக்கிறது. பொது இடங்களுக்கு ஜோடியாக சென்றால் காதல் என்று கிசுகிசு கிளம்புவதை தவிர்க்க பொது இடங்களில் சுற்றுவதில்லை என்கிறார்கள்.

இருவருக்கும் பொதுவான தோழியான ஆகான்ஷா ரஞ்சனுடன் சேர்ந்து ராகுலும், அதியாவும் படம் எடுத்து கொண்டனர். அவர்களின் புகைப்படத்தை யாரும் பார்த்தது இல்லை. அந்த புகைப்படத்தில் கூட ராகுல் தனது முகத்தை சரியாக காட்டாமல் நின்று கொண்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com