அயர்லாந்து அணியின் நட்சத்திர வீரர் கெவின் ஓ'பிரையன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

கெவின் ஓ'பிரையன் அயர்லாந்து அணிக்காக 153 ஒருநாள் போட்டிகளில் 3,618 ரன்கள் அடித்ததுடன் 114 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
கெவின் ஓ'பிரையன்
கெவின் ஓ'பிரையன்
Published on

அயர்லாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்பவர் கெவின் ஓ'பிரையன். 37 வயதாகும் இவர் அயர்லாந்து அணிக்காக 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடிள்ளார். இவர் இன்று ஒருநாள் போட்டியில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார். ஒருநாள் போட்டியில் 3618 ரன்கள் அடித்ததுடன் 114 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

ஓய்வு முடிவு குறித்து கெவின் ஓ'பிரையன் கூறுகையில் ‘‘15 வருடங்களாக அயர்லாந்து அணிக்காக விளையாடிய பின்னர், தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது சரியான நேரம் என உணர்கிறேன். நாட்டிற்காக 153 முறை ஒருநாள் போட்டியில் விளையாடியது எனக்கு பெருமை. எனது வாழ்நாள் முழுவதும் இது ஞாபகத்தில் இருக்கும்’’  என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com