‘டை’யில் முடிந்த 3-வது டி20: சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது அயர்லாந்து

கடைசி டி20 ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் 8 ரன்னை சேஸிங் செய்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது அயர்லாந்து.
சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்த மகிழ்ச்சியில் ஓ'பிரைன்
சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைத்த மகிழ்ச்சியில் ஓ'பிரைன்
Published on

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கிரேட்டர் நொய்டாவில் இன்று நடைபெற்றது. அயர்லாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஓ'பிரைன் 26 ரன்னும், டெலனி 37 ரன்னும், டெக்டர் 31 ரன்னும் அடிக்க அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 143 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 29 பந்தில் 42 ரன்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 12.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. 47 பந்தில் 50 ரன்கள் மட்டுமே தேவையிருந்தது. கைவசம் 8 விக்கெட் இருந்ததால் ஆப்கானிஸ்தான் எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்பின் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கான் முதல் பந்தில் ஒரு ரன் அடித்தார். அடுத்த பந்தில் ஆப்கன் அஸ்கர் இரண்டு ரன்கள் அடித்தார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி மூன்று பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

4-வது பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. அதற்குப் பதிலாக வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு தூக்கினார் ரஷித் கான். இதனால் கடைசி இரண்டு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது பந்தில் வைடு மூலம் ஒரு ரன் கிடைத்தது. ஆனால் அதற்குப் பதிலாக வீசிய பந்தில் ரன்ஏதும் கிடைக்கவில்லை.

ஆகவே கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. ரஷித் கானால் அந்த பந்தை பவுண்டரிக்குதான் துரத்த முடிந்தது.

இதனால் ஆப்கானிஸ்தான் அணியும் 142 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தானால் 8 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் 9 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய அயர்லாந்து கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து  வெற்றி பெற்றது.

ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதால் ஆப்கானிஸ்தான் தொடரை 2-1 எனக் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com