முத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து

முத்தரப்பு ஒருநாள் போட்டி: யுனைடெட் அரபு எமிரேட்சை வீழ்த்தியது அயர்லாந்து

துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன.
Published on

துபாய்:

துபாயில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. இதில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன.

யுனைடெட் அரபு எமிரேட்ஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய முதல் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்சின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஷ்பாக் அகமதுவும், முஸ்தபாவும் களமிறங்கினர். அஷ்பாக் ஓரளவு விளையாடி 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. ரமீஸ் ஷசாத் மட்டும் சிறப்பாக விளையாடி 75 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது.

அயர்லாந்து அணி தரப்பில் ரன்கின், மெக்கார்த்தி, சேஸ், ஒ பிரியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், டேக்ரெல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அயர்லாந்து அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். ஆனாலும், அதன்பின் வந்த எட் ஜாய்சும், கேரி வில்சனும் சிறப்பாக விளையாடினர்.

எட் ஜாய்ஸ் நன்கு விளையாடி 149 பந்துகளில் 1 சிக்சர், 13 பவுண்டரி உள்பட 116 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்ம், கேரி வில்சன் 83 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 53 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். இதையடுத்து, அயர்லாந்து அணி

49. 2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

யுனைடெட் அரபு எமிரேட்ஸ் சார்பில்  நவீத், அகமது சார்பில் தலா 2 விக்கெட்டுகளும், முஸ்தபா, ஜாகிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

நாளை நடைபெறவுள்ள அடுத்த போட்டியில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியும், அயர்லாந்து அணியும் மோதுகின்றன.  #Ireland #UnitedArabEmirates #Triseries,

X

Maalai Malar
www.maalaimalar.com