இரானி கோப்பை கிரிக்கெட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் விதர்பா 6 விக்கெட் இழப்பிற்கு 245

இரானி கோப்பை கிரிக்கெட்டில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கெதிராக விதர்பா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் அடித்துள்ளது. #IraniCup
இரானி கோப்பை கிரிக்கெட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் விதர்பா 6 விக்கெட் இழப்பிற்கு 245
Published on

இரானி கோப்பை கிரிக்கெட் தொடர் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் ரெஸ்ட் ஆப் இந்தியா 330 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

ஹனுமா விஹாரி 114 ரன்களும், மயாங்க் அகர்வால் 95 ரன்களும் அடித்தனர். விதர்பா அணி சார்பில் சர்வாத், வகாரே தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விதர்பா அணியின் பாசல், சஞ்சய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பாசல் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சய் 65 ரன்கள் அடித்தார்.

டைட் 15 ரன்னிலும், காலே 1 ரன்னிலும் சர்வாத் 18 ரன்னிலும் வெளியேறினார்கள். கணேஷ் சதிஷ் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். வாத்கர் 50 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க, விதர்பா 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் சேர்த்துள்ளது.

தற்போது வரை விதர்பா 85 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாள் முதல் செசன் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடினால் விதர்பா முன்னிலை பெற வாய்ப்புள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com