தொடர் முழுவதும் ஈடுபாடுடன் விளையாடி அசத்திய ஜாஃப்ரா ஆர்சர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலையிலும், அந்த அணியின் ஆர்சர் தொடர் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஜாஃப்ரா ஆர்சர்
ஜாஃப்ரா ஆர்சர்
Published on

ஐ.பி.எல். தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஒன்று. முதல் இரண்டு போட்டிகளில் ஸ்மித், சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாட, ஜாஃப்ரா ஆர்சர் சிறப்பாக பந்து வீச வெற்றி பெற்றது.

இதனால் ராஜஸ்தான் அணி மிகவும் போட்டியான அணியாக இருக்கும் என கருதப்பட்டது, ஆனால் அதன்பிறகு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் ஜாஃப்ரா ஆர்சர் மட்டும் சிறப்பாக பந்து வீசிய நிலையில் அவருக்கு துணையாக பேட்ஸ்மேன்களும் இருக்கவில்லை. பந்து வீச்சாளர்களும் இருக்கவில்லை.

இதனால் 6 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. 14 போட்டிகளிலும் விளையாடிய ஆர்சர் 20 விக்கெட் வீழ்த்தி முதல் 6 பேர் பட்டியலில் உள்ளார். அவரது சிறப்பு அம்சமே ஒருவருக்கு சராசரியாக 6.55 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததாகும். 55.4 ஓவர்கள் வீசி 365 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். அதிகபசட்சமாக 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் சாய்த்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com