ஐ.பி.எல்.: மும்பையை 4-0 என ஒயிட்வாஷ் செய்து கோப்பையை கைப்பற்றுமா புனே?

பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப் போட்டியிலும் வீழ்த்தி 4-0 என ஒயிட்வாஷ் செய்து புனே அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
ஐ.பி.எல்.: மும்பையை 4-0 என ஒயிட்வாஷ் செய்து கோப்பையை கைப்பற்றுமா புனே?
Published on

14 போட்டிகள் கொண்ட லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி 9 வெற்றிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. முதல் குவாலிபையரில் மும்பையை வீழ்த்தி புனே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபையர் 2-ல் கொல்கத்தா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

அசுர பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை புனே அணி எளிதாக வென்றுள்ளது. மும்பை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை எதிர்கொண்டது. பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து 6 வெற்றிகள் பெற்றது.

அடுத்த போட்டியில் புனே அணியை சந்தித்தது. இதில் நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. பின்னர் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம்பிடித்தது.

குவாலிபையர் 1-ல் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான மூன்று போட்டிகளிலும் ரைசிங் புனே வெற்றி பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com