

கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி வலுவான கொல்கத்தா அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கேப்டன் டேவிட் வார்னரின் (126 ரன்கள்) அசத்தலால் ஐதராபாத் அணி 209 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கனே வில்லியம்சன், யுவராஜ்சிங் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.
பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் 20 விக்கெட்டுகள் வீழ்த்தி வலுவான நிலையில் விளங்கி வருகிறார். நெஹரா பந்து வீச்சில் நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார். டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதுடன், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியுமா? என்ற கேள்விக்குறியுடன் உள்ளது.
டெல்லி அணி தனது கடைசி 5 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது. கடைசியாக நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 67 ரன்னில் சுருண்ட டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை கண்டது.
டெல்லி அணியின் பேட்டிங் பலவீனமானதாக இருந்து வருகிறது. கடந்த லீக் ஆட்டத்தில் காயம் காரணமாக கேப்டன் ஜாகீர்கான் களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக கருண் நாயர் கேப்டன் பொறுப்பை கவனித்தார். இந்த ஆட்டத்தில் ஜாகீர்கான் ஆடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.