ஐபிஎல் வீரர்கள் ஏலம்: சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலுக்கு ரூ. 5 கோடி, வெஸ்ட் இண்டீஸ் கீப்பருக்கு ரூ. 4.2 கோடி

வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பரான நிக்கோலஸ் பூரனை 4.2 கோடி ரூபாய் கொடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. #IPL2019 #IPLAuction2019
ஐபிஎல் வீரர்கள் ஏலம்: சுழற்பந்து வீச்சாளர் அக்சர் பட்டேலுக்கு ரூ. 5 கோடி, வெஸ்ட் இண்டீஸ் கீப்பருக்கு ரூ. 4.2 கோடி
Published on

ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சார் பட்டேலை  ஏலம் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஆர்வம் காட்டின. இதனால் இவரது மதிப்பு கோடியை தாண்டிச் சென்றது.

இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் விக்கெட் கீப்பரான நிக்கோலஸ் பூரனை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பரான விருத்திமான் சகாவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com