கெவின் பீட்டர்சனின் சிறந்த ‘வெர்சன்’ டாம் பாண்டன்: கே.கே.ஆர். அணியின் தலைமை ஆலோசகர் சொல்கிறார்

இங்கிலாந்து அணியின் இளம் வீரரான டாம் பாண்டன் புதிய வெர்சன் அல்லது கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சன் என கே.கே.ஆர். அணியின் தலைமை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
டாம் பாண்டன்
டாம் பாண்டன்
Published on

இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்டன். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் டி20 லீக்கில் சிறப்பாக விளையாடியதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரெண்டன் மெக்கல்லம் அவரை ஏலம் எடுக்க விரும்பினார்.

மெக்கல்லம் விருப்பத்தின்படி அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில் டாம் பாண்டன் கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சன் என்று அந்த அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி தெரிவித்துள்ளார்.

டாம் பாண்டன் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி கூறுகையில் ‘‘டாம் பாண்டனை ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை வெளிநாட்டு வீரர்கள் அணியில் வந்து இணையவில்லை. டாம் பாண்டன் நேரடி ஆட்டத்தை காண உற்சாகமாக இருக்கிறோம். பிக் பாஷில் அவரது ஆட்டம் தனித்துவமானதாக இருந்தது.

அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல் ஆட்டங்களும் சிறப்பாக இருக்கும். அவர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்து வழிநடத்தி செல்வார்கள். 21 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பாண்டன் புதிய வெர்சன் அல்லது கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சன்.

அந்ரே ரஸல் 3-வது வீரராக களம் இறங்கி 60 பந்துகளை சந்தித்தால், அவரால் இரட்டை சதம் அடிக்க முடியும். அவர் அற்புதமான வீரர். அவர் எப்போதும் அணியின் இதய துடிப்பாக உள்ளார்’’என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com