பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம்பெறமாட்டார்: ஸ்டீபன் பிளமிங்

சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் என அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
பிளமிங், பிராவோ
பிளமிங், பிராவோ
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. மைதானத்தில் ரசிகர்கள் இல்லை என்றாலும் முதல் ஐபிஎல் போட்டி பரபரப்பாகவே இருந்தது. சென்னை - மும்பை அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என சென்னை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

சென்னை அணியில் ஆல்-ரவுண்டர் பிராவோ இடம் பெறவில்லை. இதுகுறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், ‘‘சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார். கால் மூட்டியில் காயம் ஏற்பட்டு தற்போது அவர் மீண்டுள்ளார் ’’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com