ரூ.8,001 தள்ளுபடி செய்யப்பட்ட 32 ஜிபி ஐபோன்

ஆப்பிள் ஐபோன் 32 ஜிபி மாடலின் விலையில் ரூ.8,001 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த சலுகை அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வழங்கப்படுகிறது.
ரூ.8,001 தள்ளுபடி செய்யப்பட்ட 32 ஜிபி ஐபோன்
Published on

இந்தியாவில் கிடைக்கும் மலிவு விலை ஐபோன் மாடலாக ஐபோன் SE இருக்கிறது. ஆப்பிள் சமீபத்திய ஐபோன் X மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஐபோன் SE விலை குறைக்கப்பட்டுள்ளது.

அமேசான் தளத்தில் ரூ.26,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஐபோன் SE 32 ஜிபி மாடல் தற்சமயம் ரூ.17,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து ஐபோன் மாடல்களின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபோன் SE விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் இறக்குமதி வரி உயர்வில் ஐபோன் SE பாதிக்கப்படவில்லை. ஐபோன் 8 மற்றும் ஐபோன் X விலையை கருத்தில் கொண்டு ஐபோன் SE குறைந்த விலையில் வாங்க சிறந்த ஆப்பிள் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. ஐபோன் SE மாடலில் சமீபத்திய ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளம், சீரான வேகம் மற்றும் தலைசதிறந்த கேமரா கொண்டுள்ளது.


ஐபோன் SE ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.0 இன்ச் 640x1136 பிக்சல் டிஸ்ப்ளே, ஆப்பிள் A9 சிப்செட், 2 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 12 எம்பி பிரைமரி கேமரா, 5-எலிமென்ட் லென்ஸ், ட்ரூடோன் பிளாஷ் மற்றும் 1.2 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் X போன்று இல்லாமல், ஐபோன் SE மாடலில் டச் ஐடி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் SE மாடலின் தற்போதைய விலை மோட்டோ ஜி5எஸ் பிளஸ், நோக்கியா 6 மற்றும் சியோமி MiA1 உள்ளிட்ட மாடல்களுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும். மூன்று ஸ்மார்ட்போன்களிலும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டிருந்தாலும், ஆப்பிள் A9 சிப்செட்டை விட குறைவான வேகம் கொண்ட பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com