ஐபோன் லீக்ஸ்: ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கும் ஐபோன் 8 புகைப்படம் கசிந்தது

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில். ஐடிராப் தளம் மூலம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஐபோன் 8- ஐ.ஒ.எஸ். 11 இயங்குதளம் கொண்டு இயங்குவது தெரியவந்துள்ளது.
ஐபோன் லீக்ஸ்: ஐ.ஓ.எஸ். 11 கொண்டு இயங்கும் ஐபோன் 8 புகைப்படம் கசிந்தது
Published on

புதுடெல்லி: 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அதன்படி ஐடிராப் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களில் ஐபோன் 8 ஆப்பிளின் புதிய ஐஓஎஸ் 11 கொண்டு இயங்குவதை வெளிப்படுத்தியுள்ளது. 

புதிய புகைப்படங்களில் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் மியூசிக் டேப், லாக் ஸ்கிரீன், ஆப்பிள் பே வசதி கொண்ட ஐமெசேஜ் மற்றும் பல்வேறு புதிய செயலிகள் காணப்படுகிறது. தற்சமயம் பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டுள்ள ஐஓஎஸ் 11 விரைவில் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்துடன் ஐபோன் 8 முன்பக்க பேனல் முழுமையான பெசல் லெஸ் டிஸ்ப்ளே, ஹோம் பட்டன் நீக்கப்பட்டு இருப்பதையும், கிளாஸ் பேக் கொண்ட வடிவமைப்பு கொண்டிருக்கும். புதிய தகவல்களில் எம்பெட் செய்யப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியும் வயர்லெஸ் சார்ஜிங் செய்யும் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ள இரட்டை கேமரா அமைப்பு, இதனிடையே பிளாஷ் மற்றும் ஆக்மென்ட்டெட் ரியலிட்டி அம்சங்களை வழங்க 3D வசதி வழங்கப்படலாம். இத்துடன் ஐபோன் 8-இல் இன்ஃப்ராரெட் சென்சார் மற்றும் லேசர் 3டி சென்சிங் கேமரா மாட்யூல்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

சமீபத்தில் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வில் அந்நிறுவனம் புதிய ஏ.ஆர். கிட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதை கொண்டு ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள பில்ட்-இன் கேமரா, பிராசஸர் மற்றும் மோஷன் சென்சார் மூலம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அனுபவங்களை டெவலப்பர்கள் உருவாக்க முடியும்.

ஆப்பிள் ஐபோன் 8 முழுமையன எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே, 5.1 இன்ச் ஸ்கிரீன், வளைந்த கிளாஸ் வடிவமைப்பு, வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கும் என்றும் குறைந்தபட்சம் இதன் விலை 1000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.64,296 முதல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com