இன்று முதல் விற்பனைக்கு வரும் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்: சலுகைகள் மற்றும் முழு தகவல்கள்

இந்தியாவில் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது. விற்பனை, சலுகைகள் மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
இன்று முதல் விற்பனைக்கு வரும் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ்: சலுகைகள் மற்றும் முழு தகவல்கள்
Published on

புதுடெல்லி:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்று மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல்களான ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 

ஆப்பிள் புதிய சாதனங்களுக்கான முன்பதிவுகள் செப்டம்பர் 22-ம் தேதி துவங்கியது. புதிய ஐபோன்கள் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி என இரண்டு வித மெமரிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 64 ஜிபி ஐபோன் 8 ரூ.64,000 மற்றும் 256 ஜிபி ரூ.77,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 8 பிளஸ் 64 ஜிபி மாடல் ரூ.73,000 மற்றும் 256 ஜிபி ஐபோன் 8 பிளஸ் ரூ.86,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஐபோன்களின் விற்பனை இன்று மாலை 6.00 மணிக்கு துவங்குகிறது. அமேசான், பிளிப்கார்ட், இன்ஃபிபீம் மற்றும் ஜியோ அதிகாரப்பூர்வ தளத்தில் வாங்க முடியும். இத்துடன் க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் விஜய் சேல்ஸ் உள்ளிட்டவற்றிலும் ஐபோன் விற்பனை நடைபெற இருக்கிறது.

அமேசான் இந்தியா, ஜியோ தளம் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் கேஷ்பேக், எக்சேஞ்ச் சலுகை மற்றும் பைபேக் கியாரண்டி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. அமேசானில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.16,500 வரை எக்சேஞ்ச் சலுகையும் 256 ஜிபி வாங்குவோர் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது குறைந்தபட்சம் ரூ.12,100 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 8 வாங்குவோர் பழைய சாதனங்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.23,000 தள்ளுபடி மற்றும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளுக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதில் கேஷ்பேக் டிசம்பர் 30, 2017க்குள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 64 ஜிபி ஐபோன் 8 விலை ரூ.54,000 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ.67,000 வரை வாங்கிட முடியும். இதேபோல் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி ஐபோன் 8 பிளஸ் விலை முறையே ரூ.63,000 மற்றும் ரூ.76,000க்கு வாங்கிட முடியும். 

ரிலையன்ஸ் ஜியோ ஸ்டோர், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் ஜியோ தளத்தில் ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு வாங்குவோருக்கு ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் இரண்டு ஐபோன்களை வாங்குவோருக்கு ரூ.799 திட்டத்தின் படி 90 ஜிபி டேட்டா, இலவச எஸ்எம்எஸ், ஜியோ செயலி மற்றும் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com