அமேசான் அதிரடி: நம்ப முடியாத விலையில் ஐபோன் 7 (32 ஜிபி) விற்பனை

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 (32 ஜிபி) விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தளத்தில் ரூ.60,000க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 7 அமேசானில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அமேசான் அதிரடி: நம்ப முடியாத விலையில் ஐபோன் 7 (32 ஜிபி) விற்பனை
Published on

புதுடெல்லி:

அமேசான் இந்தியா தளத்தில் ஐபோன் 7 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 7 மெமரி மாடல்களுக்கு ஏற்ப தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபோன் 7 (32 ஜிபி) ரூ.44,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக பிளிப்கார்ட் ஐபோன் 6 மாடல்களுக்கு சிறப்பு தள்ளுடி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமேசான் தளத்தில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.   

அதன்படி அமேசானில் ஐபோன் 7 (32 ஜிபி) ரூ.44,700க்கு,ம் 128 ஜிபி ரூ.52,999 விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. 256 ஜிபி ஐபோன் 7 ரூ.69,300 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஐபோன் 7 கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.  

ஐபோன் 7 சிறப்பம்சங்கள்:

* 4.7 இன்ச் ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே

* 64-பிட் A10 ஃபியூஷன் சிப்

* 2 ஜிபி ரேம் 

* வாட்டர் ரெசிஸ்டண்ட்

* 12 எம்பி பிரைமரி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி

* 7 எம்பி செல்ஃபி கேமரா, 1080 பிக்சல் வீடியோ பதிவு செய்யும் வசதி

* கைரேகை ஸ்கேனர் 

* 1960 எம்ஏஎச் பேட்டரி

ஆப்பிள் இணையத்தளத்தில் ஐபோன் 7 (32 ஜிபி) மாடல் ரூ.60,000 முதல் துவங்குகிறது. இதே போல் ஐபோன் 7 பிளஸ் ரூ.72,000 முதல் துவங்குகிறது. அதிகபட்சமாக ஐபோன் 7 256 ஜிபி ரூ.80,000 மற்றும் ஐபோன் 7 பிளஸ் 256 ஜிபி ரூ.92,000 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com