டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜர்

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று விசாரணை அதிகாரி முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜர் ஆனார். #KarthiChidambaram
டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜர்
Published on

புதுடெல்லி:

மத்தியில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா குழுமம் மொரீசியஸ் நாட்டில் இருந்து நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதியை பெற்றுத்தந்ததாகவும், இதற்காக அவரது மறைமுக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனம் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அமலாக்கத்துறை, இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு ஏற்கனவே இரு முறை சம்மன் அனுப்பியது. அப்போது அவரது சார்பில் அவரது பிரதிநிதி ஆஜர் ஆனார்.

இந்த நிலையில், விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜராகுமாறு கோரி கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதை ஏற்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று விசாரணை அதிகாரி முன்பு கார்த்தி சிதம்பரம் ஆஜர் ஆனார். அவரிடம் விசாரணை அதிகாரி பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com