அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த செவிலியர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on: 

சென்னை:

ராமநாதபுரத்தைச் சேர்ந்த கலைவாணி உள்ளிட்ட 12 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ஒப்பந்த செவிலியர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதால், அந்த தேர்வை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். தேர்வில் விதிமீறல் உள்ளதாகவும், தேர்வு பட்டியல் நியாயமான முறையில் வெளியிடப்படவில்லை என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்க இடைக்கால தடை விதித்தார். மேலும், இந்த வழக்கில் மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com