கத்தார் ஓபனில் இருந்து ஜோகோவிக் விலகல்: ஆஸ்திரேலிய ஓபன் சந்தேகம்?

கத்தார் ஓபனில் இருந்து நடப்பு சாம்பியன் ஜோகோவிக் விலகியுள்ளார். இதனால் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. #QatarOpen #Djokovic
கத்தார் ஓபனில் இருந்து ஜோகோவிக் விலகல்: ஆஸ்திரேலிய ஓபன் சந்தேகம்?
Published on

2018-ம் ஆண்டில் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது. அதற்கு முன்னோட்டமாக கருதப்படும் ஏடிபி ஓபன் டென்னிஸ் தொடரான  கத்தார் ஓபன் டென்னிஸ் தோகாவில்  அடுத்த வாரம் தொடங்குகிறது.

இந்த தொடர் ஆஸ்திரேலியா ஓபனுக்கு சரியான பயிற்சியாக அமையும் என நினைத்த நடப்பு சாம்பியன் ஜோகோவிக் கத்தார் ஓபனில் விளையாட முடிவு செய்திருந்தார். நடப்பு சாம்பியன் என்பதால் இந்த தொடருக்கு முதல்தர வரிசையை பெற்றிருந்தார். இந்நிலையில் முழங்கை காயம் 100 சதவீதம் குணமடையாததால் கத்தார் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஜோகோவிக் 12 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com