

பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை டோட்டன்ஹாம் 3-1 என வீழ்த்தியது. இதில் இரண்டு கோல்கள் அடித்து டோட்டன்ஹாம் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் கடைசி 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியுள்ளது டோட்டன்ஹாம்.
இந்த மாதத்தில் இங்கிலாந்து அணி வெம்ப்ளே மைதானத்தில் ஜெர்மனி மற்றும் பிரேசில் அணிகளுக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான போட்டியின்போது தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால் இந்த இரண்டு போட்டிகளிலும் டேல் அலி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.