இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ.வாக சாலில் எஸ் பாரீக் நியமனம்

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனராக சாலில் எஸ் பாரீக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Published on

இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் சிக்கா ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு தற்காலிகமாக புதிய தலைவர் மற்றும் இயக்குனராக யூ.பி.பிரவின் ராவ் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிய மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனராக சாலில் எஸ் பாரீக் அறிவிக்கப்பட்டுள்ளார். 5 ஆண்டுகள் பதவி என்ற கணக்கில் அவர் ஜனவரி 2 ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

இதையடுத்து தற்சமயம் பதவில் உள்ள யூ.பி.பிரவீன் ராய் தனது பதவியை ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது.

உலக பொருளாதார சூழல், கார்பரேட் நிறுவனங்களுக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இன்போசிஸ் நிறுவனம் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com