பிரதமரின் விமான பயண செலவு எவ்வளவு?- ஏர் இந்தியாவுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

பிரதமர் மோடி மேற்கொண்ட விமான பயண செலவை தேதி வாரியாக வெளியிட வேண்டும் என்று ஏர்இந்தியா நிறுவனத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #PMModi #AirIndia
பிரதமரின் விமான பயண செலவு எவ்வளவு?- ஏர் இந்தியாவுக்கு தகவல் ஆணையம் உத்தரவு
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடு பயணம் மேற்கொள்வது தொடர்பாக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

லோகேஷ் பத்ரா என்பவர் தகவல் அறியும் கட்டத்தின் கீழ் 2016-17 ஆண்டு காலக்கட்டத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் தேதிகள், தங்கியிருந்த நாட்கள், பயணித்த இடங்கள், மோடியின் பயணத்துக்கான பிரதமர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட விமான கட்டணங்களுக்கான ரசிதுகள் ஆகியவற்றை ஏர் இந்தியா நிறுவனத்திடம் கேட்டு இருந்தார்.

பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தி இருப்பதால் மேற்கண்ட தகவல்களை வெளியிட இயலாது என்று ஏர் இந்தியா நிறுவனம் மறுத்து இருந்தது.

இதை தொடர்ந்து அவர் மத்திய தகவல் ஆணையத்திடம் முறையீடு மனு அளித்தார். அந்த மனு மீது மத்திய தகவல் ஆணைய கமி‌ஷனர் அமித்வா பட்டாச்சாரியா நேற்று தனது உத்தரவை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது-

அரசு கருவூலத்தில் இருந்து தான் பிரதமரின் வெளிநாட்டு பயணங்களுக்கான விமானக் கட்டணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனால் அது தொடர்பான விவரங்களை கோரும் போது வர்த்தக ரகசியம் காத்தல் என்பதன் அடிப்படையில் அந்த தகவல்களை அளிக்க மறுக்க கூடாது. பிரதமரின் விமான பயணத்துக்கு வசூலிக்கப்பட்ட கட்டண விவரங்களை தேதி வாரியாக ஏர் இந்தியா அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். #PMModi

X

Maalai Malar
www.maalaimalar.com