ஐதராபாத் டெஸ்ட்- தேனீர் இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் - 197/6

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீச, வெஸ்ட் இண்டீஸ் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் அடித்துள்ளது. #INDvWI
ஐதராபாத் டெஸ்ட்- தேனீர் இடைவேளை வரை வெஸ்ட் இண்டீஸ் - 197/6
Published on

இந்திய அணியில் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஷர்துல் தாகூர் அறிமுக வீரராக களமிறங்கினார். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆகும் 5-வது வீரர் இவர். ஜேசன் ஹோல்டர், ஜோமல் வாரிகன் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றனர்.

இந்தியா: கோலி (கேப்டன்), ராகுல், பிருத்வி, புஜாரா, ரகானே, ரிஷப் பன்ட், ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், குல்தீப், ஷர்துல் தாக்கூர்.

வெஸ்ட் இண்டீஸ்:  ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பிராத்வைட், பாவெல், ஹோப், ஹெட்மையர், அம்ப்ரிஸ், சேஸ், டவ்ரிச், வாரிகன், தேவேந்திர பிஷூ, கேப்ரியேல்.

பிராத்வைட், பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 4-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை வீசும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதானல் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இதனால் உமேஷ் யாதவ் உடன் இணைந்து அஸ்வின் பந்து வீசினார். 12-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பொவேல் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷாய் ஹோப் களம் இறங்கினார். பிராத்வைட் 14 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஷாய் ஹோப் எல்பிடபிள்யூ ஆனார்.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஹெட்மையர் 10 ரன்னுடன் களத்தில் இருந்தார். மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

ஹெட்மையர் உடன் அம்ப்ரிஸ் ஜோடி சேர்ந்தார். ஹெட்மையர் 12 ரன்கள் எடுத்த நிலையிலும், அம்ப்ரிஸ் 18 ரன்கள் எடுத்த நிலையிலும் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 38.5 ஓவரில் 113 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.

6-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ் உடன் விக்கெட் கீப்பர் டவ்ரிச் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. இருவரும் தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

தேனீர் இடைவேளைக்கு ஆறு ஓவர்கள் இருந்த நிலையில் உமேஷ் யாதவ் பந்து வீச அழைக்கப்பட்டார். 60-வது ஓவரின் 3-வது பந்தில் டவ்ரிச் 30 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். 6-வது விக்கெட்டுக்கு சேஸ் - டவ்ரிச் ஜோடி 69 ரன்கள் சேர்த்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com