இண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன விருது

இண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன விருதை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகளின் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி வில்லியம் போல்டர்
இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி வில்லியம் போல்டர்
Published on

கொல்கத்தா:

பயணம் மற்றும் சுற்றுலாத்துறை சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது. சுற்றுலாத்துறையில் புதுமையான முயற்சிகள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் ஒரு கட்டமாக, இந்த விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அவ்வகையில், இண்டிகோ நிறுவனத்திற்கு சிறந்த உள்நாட்டு விமான சேவை நிறுவன விருது வழங்கப்பட்டது. 

இந்த விருதைப் பெற்ற, இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி வில்லியம் போல்டர் கூறுகையில், "நாட்டின் உயர்நிலை வணிக அமைப்பால் அங்கீகரிக்கப்படுவது எங்களுக்கு கிடைத்த மிக உயர்ந்த மரியாதையாக கருதுகிறோம். ‘சிறந்த உள்நாட்டு விமான சேவை’ என்ற பட்டத்தை பெறும் முதல் நிறுவனமாக இருப்பது மட்டுமல்லாது, தொடர்ந்து சிறந்த சேவையை தர முயற்சி செய்யவும் எங்களுக்கு இவ்விருது ஊக்கமளிக்கிறது.

சுற்றுலாத்துறை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மதிப்புமிக்க நிறுவனத்தால் வழங்கப்படும் இத்தகைய பாராட்டுக்கள் இந்த துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க விமான சேவை நிறுவனங்களுக்கு ஒரு பெரிய உந்து சக்தியாக இருக்கும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com