ஐரோப்பிய ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது திவிஜ் சரண் ஜோடி

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திவிஜ் சரண், அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஐரோப்பிய ஓபன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது திவிஜ் சரண் ஜோடி
Published on

ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடர் போட்டிகள் கடந்த 16-ம் தேதி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் தொடங்கியது. இத்தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி 22-ம் தேதி நடந்தது. இப்போட்டியில், இந்தியாவின் திவிஜ் சரண் - அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி, சிலியின் ஜூலியோ பெரால்டா - மெக்சிகோவின் சாண்டியகோ கான்சலேஸ் ஜோடியை எதிர்கொண்டது.

இப்போட்டியில், திவிஜ் சரண் - ஸ்காட் லிப்ஸ்கி ஜோடி 6-4, 2-6, 10-5 என்ற செட் கணக்கில் வெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

X

Maalai Malar
www.maalaimalar.com