இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 91.54 சதவீதம் பேர் குணமடைந்தனர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள்
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. புதிய நோய்த்தொற்று எண்ணிக்கை குறைவதுடன், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆறுதல் அளிக்கிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81.84 லட்சமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 470 பேர் மரணம் அடைந்துள்ளனர். 

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,32,829-ல் இருந்து 74,91,513 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 58,684 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோரின் எண்ணிக்கை 91.54 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,70,458 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com